/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தே.மு.தி.க., ஊர்வலத்தில் மோதல் பண்ருட்டியில் பரபரப்பு
/
தே.மு.தி.க., ஊர்வலத்தில் மோதல் பண்ருட்டியில் பரபரப்பு
தே.மு.தி.க., ஊர்வலத்தில் மோதல் பண்ருட்டியில் பரபரப்பு
தே.மு.தி.க., ஊர்வலத்தில் மோதல் பண்ருட்டியில் பரபரப்பு
ADDED : ஏப் 15, 2024 05:07 AM

பண்ருட்டி, : பண்ருட்டியில் தே.மு.தி.க., பிரசார ஊர்வலத்தில் பைக்கில் வந்தவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் இருந்து, தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் நேற்று பிரசாரம் துவங்கியது.
பிரசாரம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. படைவீட்டம்மன் கோவில் தேர் அருகில் சென்றபோது பைக்கில் சென்ற அ.தி.மு.க., வினருக்குள் யார் முன்னாள் செல்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது 5க்கும் மேற்பட்டோர் பைக்கை நிறுத்திவிட்டு, பைக்கில் கட்டியிருந்த கொடியால் மற்றொரு தரப்பினரை தாக்கினர். அங்கு இருந்த கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.