/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர் போக்சோவில் கைது
/
மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர் போக்சோவில் கைது
ADDED : ஏப் 06, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 56; உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியரான இவர், மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் நேற்று பள்ளிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

