ADDED : மே 19, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்வான பர்வதவர்த்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் இன்று இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. 21ம் தேதி காலை 7:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

