/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரம்மோற்சவ விழா 15ம் தேதி துவக்கம்
/
பிரம்மோற்சவ விழா 15ம் தேதி துவக்கம்
ADDED : ஏப் 08, 2024 05:26 AM
புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி கிண்ணித்தேர் பிரம்மோற்சவ விழா வரும் 15ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி பாரதி வீதியில், காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் இந்த ஆண்டு, சித்ரா பவுர்ணமி கிண்ணீத்தேர் பிரம்மோற்ச விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. 25ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, தெப்ப உற்வச விழா நடக்கிறது.தொடர்ந்து, 27ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சி, 28ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 29ம் தேதி அம்மனுக்கு ஜல அபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

