ADDED : ஏப் 26, 2024 11:41 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் அடுத்து வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன், 60; மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி தனது பைக்கை மரப்பாலம், தேங்காய்த்திட்டு சந்திக்கும் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, தனது நண்பருடன் மற்றோரு பைக்கில் சென்றார்.
திரும்பி வந்து, பார்த்தபோது, அங்கு நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போயிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. அவரது புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.
