sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல் டாக்டர் மீது தாக்குதல் பெண் உட்பட 3 பேருக்கு வலை

பல் டாக்டர் மீது தாக்குதல் பெண் உட்பட 3 பேருக்கு வலை

பல் டாக்டர் மீது தாக்குதல் பெண் உட்பட 3 பேருக்கு வலை


ADDED : செப் 08, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2024 05:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிளினிக்கில் புகுந்து பல் டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 12வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சுமன், 38; பாக்கமுடையான்பேட் இ.சி.ஆரில் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கில், லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பரணி, 20; வரவேற்பாளராக பணிபுரிகிறார்.

கோரிமேட்டைச் சேர்ந்த சுனந்தினி, 30; கடந்த 4 மாதங்களுக்கு முன், சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு, பல் வரிசை சரியில்லாததால் டாக்டர் சுமனிடம் சிகிச்சை பெற்றார். 10 நாட்களுக்கு ஒரு முறை பல் கிளின் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 4ம் தேதி சுனந்தினிக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சுனந்தினி முன்பதிவு செய்யாமல் திடீரென கிளினிக் வந்தார். டாக்டர் சுமன் நாளைக்கு வாருங்கள் என கூறி அனுப்பினார். நேற்று முன்தினம் 2 அடையாளம் தெரியாத வாலிபருடன் கிளினிக் வந்த சுனந்தினி, வரவேற்பாளர் பரணியிடம் வாக்குவாதம் செய்தனர்.

அவர்களை டாக்டர் சுமன் தட்டி கேட்டார். அப்போது, அப்பாய்மெண்ட் கொடுத்தால் வரமாட்டீர்களா என கேட்டு, டாக்டர் சுமனை அந்த கும்பல் திட்டி தாக்கினர். கிளினிக்கில் இருந்த கருங்கல்லால் ஆன புத்தர் சிலை கொண்டு டாக்டர் சுமன் தலையில் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஜிப்மரில் சிகிச்சை பெற்ற டாக்டர் சுமன், கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சுனந்தினி மற்றும் அவருடன் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us