/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எதிர்காலத்தை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் ஆளப்போகிறது'
/
'எதிர்காலத்தை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் ஆளப்போகிறது'
'எதிர்காலத்தை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் ஆளப்போகிறது'
'எதிர்காலத்தை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் ஆளப்போகிறது'
ADDED : மார் 31, 2024 04:53 AM

புதுச்சேரி : 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், 'ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் அண்டு மெஷின் லேர்னிங்' என்ற தலைப்பில், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் வெங்கட்ட சுப்ரமணியன் பேசியதாவது:
பிறந்த குழந்தைக்கு தனது பெற்றோர், நண்பர்கள், சமூகம் மூலம் கற்றுக் கொண்டதை கொண்டு முடிவு எடுக்கும் திறன் இருக்கும். அதுபோன்று தம்மை போல் மிஷினை யோசிக்க வைப்பது தான் 'ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்'.
மிஷினுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை. ஆனால் சூழ்நிலைக்கும், சில கட்டுப்பாட்டிற்கு ஏற்ப வேலை செய்யும். அவ்வாறு செய்ய ஏ.ஐ. சேர்க்கிறோம். மனிதனுக்கு தொடுதல், நுகர்தல், பார்த்தல் உணர்வுகள் உள்ளது. ஆனால், மிஷின்களுக்கு இது கிடையாது.
ஆனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் மூலம் தொடு உணர்வு, பார்வை, குரல் பதிவுகளை கேட்கும் திறன் கொண்டு வந்து விட்டோம். மிஷின்களுக்கு உணர்வுகளை கொண்டு வருவது தொடர்பான ஆராய்ச்சி நடக்கிறது. ஏ.ஐ. இல்லாத இடமே இல்லை.
வேளாண்மை, வீடு, மிஷின், மொபைல்போன், வாட்ச் எல்லா இடத்திலும் ஏ.ஐ. வந்து விட்டது. வீட்டில் மின் விளக்கு ஆப் ஆன் செய்வது, கிச்சனில் பொருட்கள் இல்லாதது வரை ஏ.ஐ. தெரிவிக்கும். ரூம் வெப்பம் சரி செய்வது என அடித்தளம் வரை சென்று விட்டது.
வேளாண்மையில் ஏ.ஐ. மூலம் விதை தேர்வு, தண்ணீர் அளவு, நிலத்தின் தன்மை என அனைத்தையும் ஆய்வு செய்து அறிவிக்கும். அதன்படி வேளாண்மை செய்தால் நோய் தாக்கினாலும் கூட அதற்கான தீர்வு அளிக்கும். ஏ.ஐ. மூலம் வட மாநிலத்தில் விளையும் பயிரை கூட தென் மாநிலத்தில் விளைவிக்க முடியும்.
காய்கறி பறித்து மார்க்கெட்டிற்கு வரும் வரை எவ்வளவு நாள் தாங்கும். எவ்வாறு சேமிக்க வேண்டும் என்ற தகவல்களை ஏ.ஐ. தரும்.
முன்பு உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் செல்வோம். ஆனால் இன்று மருத்துவமனைக்கு சென்றால், உங்களுக்கான அடையாள எண்ணை பதிவிட்டால், ஏற்கனவே எடுத்து கொண்ட சிகிச்சை தகவல்கள் அனைத்தும் வந்து விடும்.
இது டாக்டருக்கு எளிதாக இருக்கும். வெளிநாட்டில் இருந்தபடி நம் நாட்டில் ரிமோட் மூலம் ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
ஆட்டோமொபைல் பிரிவில் ஏ.ஐ. அதிவிரைவாக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி உள்ளது. அதற்கு மிகப்பெரிய உதாரணம் ஆட்டோமெட்டிக் டிரைவிங் கொண்ட டெஸ்லா கார். இந்தியாவில் டெஸ்லா கார் இயங்கும் வகையில் சாலைகள் இல்லை.
ஏனென்றால் சரியான திட்டம் இல்லை. சாலையில் நாய், மாடு குறுக்கே வரும், எதிரில் பைக் ஓட்டி வருவார்கள் அதனால் இங்கு வரவில்லை.
அனைத்து நாடுகளும் ராக்கெட் ஏவுவதால், விண்ணில் கூட டிராபிக் அதிகமாகி விட்டது. இதனால் எப்பொழுது ராக்கெட் ஏவ வேண்டும், எந்த நேரம், எந்த பாதை, எங்கு நிலை நிறுத்த வேண்டும் என்பதை எல்லாம் ஏ.ஐ. தான் முடிவு செய்யும்.
ஏ.ஐ. படிக்க நல்ல அதிவேக திறன் கொண்டு கம்யூட்டர்கள் கொண்ட கட்டமைப்பு கொண்ட லேப் மற்றும் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் கொண்ட அமைப்புகள் இருக்க வேண்டும்.
ஏ.ஐ. படித்தாலும் அதில் திறமையாக இருந்தால் தான் வேலை.
ஏ.ஐ.க்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் தான் ஆளப் போகிறது.
அதனால் ஏ.ஐ.படிக்க அதிக போட்டி உள்ளது. ஏ.ஐ. படிப்பது சிரமம் இல்லை. எல்லா ஐடியா, நீர் மேலாண்மை, விவசாயம் என எல்லாவற்றிலும் மாணவர்களிடம் இருந்தே உருவானது.
புது சிந்தனை, பாடத்திற்கு வெளியில் இருந்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

