/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சாராய பாக்கெட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
புதுச்சேரி சாராய பாக்கெட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி சாராய பாக்கெட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி சாராய பாக்கெட்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 10, 2024 04:33 AM
புதுச்சேரி: சாராய பாக்கெட் மற்றும் பாட்டிலில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை கேள்வி நேரத்தின்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., காலாப்பட்டு தொகுதியில் குடியிருப்பு மத்தியில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்படுமா என்ற கேள்விக்கு, முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:
புதுச்சேரி கலால் விதிப்படி, மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து கணக்கிடப்படும் துார அளவிற்குள் மதுக்கடைகள் இருந்தால் இடமாற்றம் செய்யப்படுகிறது. காலாப்பட்டில் விதிகளின்படி செயல்படுவதால் கடை அகற்றும் சூழ்நிலை இல்லை.
விதிமுறைகளை சரியாக பயன்படுத்தினால் புதுச்சேரியில் பாதி மதுபான பார்களை நடத்த முடியாது. மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருந்தால், எனக்கு ஆட்சேபனை கிடையாது.
கடந்த 1989ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட 545 மதுபான கடைகளின் உரிமம் ஒரு சிலரிடம் மட்டுமே இதுவரை உள்ளது. புதுச்சேரி வருவாய், கலால் துறையை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டு ரூ. 1485 கோடி கிடைத்துள்ளது. இந்தாண்டு ரூ. 1600 கோடியாக உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம். பெங்களூரில் நள்ளிரவு 1:00 மணி வரை மதுபான கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளனர்.
அன்று இருந்த மக்கள் தொகையும் தற்போதுள்ள மக்கள் தொகையை பார்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். அதற்கு ஏற்ப மதுபான கடைகள் எண்ணிக்கை உயர்த்த வேண்டியது அவசியம்.
சாராய கடைகள் மூடிவிட்டால் என்ன நடக்கும் என அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முடியும். புதுச்சேரி அரசின் சாராய ஆலையில் இருந்து சாராயம் வழங்கப்படுகிறது. சாராயம் தொடர்பான புகார்கள் தெரிவிப்பதால், சாராய பாக்கெட் மற்றும் பாட்டிலிலும் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும்' என்றார்.

