ADDED : ஏப் 23, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் அதிகமாக குடித்தவர் பரிதபமாக இறந்தார்.
முத்தியால்பேட்டை கணேஷ் நகரைச் சேர்ந்தவர் முருகையன் 49, கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள முருகையன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மனைவி மீனா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் தினமும் குடித்து வந்த முருகையன் நேற்று முன்தினம் மாலை அதிகமாக குடித்துவிட் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

