/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாம்பனில் வெறி நாய் கடித்து 6 பேர் காயம்
/
பாம்பனில் வெறி நாய் கடித்து 6 பேர் காயம்
ADDED : மே 19, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம், : பாம்பனில் லைட் ஹவுஸ் தெரு, விவேகானந்தர் தெருவில் 500க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு நேற்று வெறிபிடித்த நாய் சுற்றி திரிந்த நிலையில் அங்கு நின்றிருந்த இன்னாசி 52, செல்வம் 60, லாய்ஸ் 3, பெத்தமை 42, அடிமை 60, இவரது மகள் பெமிலா 35, ஆகியோரை கடித்தது. காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வெறி பிடித்த நாய் பாம்பனில் சுற்றித் திரிவதால் மேலும் பலரை கடிக்கக் கூடும். எனவே அதனை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

