/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
508 தேங்காய் உடைத்து காங்கிரசார் வழிபாடு
/
508 தேங்காய் உடைத்து காங்கிரசார் வழிபாடு
ADDED : மார் 23, 2024 06:11 AM

புதுச்சேரி : காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் 508 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
இண்டியா கூட்டணியில் புதுச்சேரி லோக்சபா தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்., வேட்பாளராக சிட்டிங் எம்.பி., வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். வைத்திலிங்கம் எம்.பி.யின் விசுவாசியான காங்., சிறப்பு அழைப்பாளர் ரெயின்போ நகர் வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று பிரசத்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து,
மத்தியில் காங்., கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வேண்டும். புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என பிராத்தனை செய்தனர். அதன்பின்பு, கோவில் வாசலில் 508 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். கோவிலுக்கு வந்த சில பெண் பக்தர்களும், தங்கள் பங்கிற்கு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

