/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம், ரூ.84 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
/
4 பேரிடம், ரூ.84 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
4 பேரிடம், ரூ.84 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
4 பேரிடம், ரூ.84 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 12, 2024 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 4 பேரிடம் 84 ஆயிரம் ஏமாற்றிய மோசடி கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் 'ஸ்பீட்' ஆப் மூலம், கடன் பெற்று, முழுமையாக அடைத்தார்.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், கீர்த்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து, கூடுதல் பணம் அனுப்புமாறு, அவரை மிரட்டினார். இதில் பயந்து போன கீர்த்தனா, அந்த நபருக்கு 45 ஆயிரம் பணம் அனுப்பி ஏமாந்தார்.
கலைவாணர் நகரை சேர்ந்த அனுஷா, பிருந்தாவனம் நகர் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் பணத்தை டிபாசிட் செய்ய வந்தார். அங்கு ஏ.டி.எம்., வேலை செய்யவில்லை.
இதனால், அருகில் இருந்த ஒருவர், பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்புவதாக கூற, அனுஷா அவரிடம் ரூ.30 ஆயிரத்தை கொடுத்தார். ஆனால் இறுதியில் அனுஷாவின் வங்கிக்கணக்கில், பணம் வந்து சேரவில்லை. அதன் பிறகே அவர் ஏமாந்தது தெரிந்தது.
ராஜாகோபால் நகரை சேர்ந்த கோபால், ரூ.5 ஆயிரம், ரெட்டியார்பாளையம் வைஷ்ணவி ரூ.4 ஆயிரம், ஆன்லைனில் ஏமாந்தனர். இந்த நான்கு பேரும் மொத்தம், ரூ.84 ஆயிரம் பணத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

