/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நச்சு வாயுவால் 30 பேர் மயக்கம் தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு
/
நச்சு வாயுவால் 30 பேர் மயக்கம் தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு
நச்சு வாயுவால் 30 பேர் மயக்கம் தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு
நச்சு வாயுவால் 30 பேர் மயக்கம் தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஏப் 23, 2024 03:57 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே நச்சு வாயுவால் 30 பேர் பாதிக்கப்பட்ட சம்பவத்தில், தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு கிராமத்தில், இயங்கி வரும் மருத்துவக்கழிவு பொருட்களை சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்த கடந்த 20ம் தேதி இரவு நச்சு வாயு வெளியேறிது.
இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 30 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் நேற்று முன்தினம் தொழிற்சாலையை ஆய்வு செய்து, மின் இணைப்பை துண்டித்து 'சீல் வைத்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வேடம்பட்டைச் சேர்ந்த முனிசாமி மகன் மதன் உள்ளிட்டோர் காணை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், தொழிற்சாலை உரிமையாளரான, விழுப்புரம் வழுதரெட்டி ஆடல் நகரைச் சேர்ந்த வித்யாசாகர் மகன் கண்ணன் மீது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொழிற்சாலையை நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.