/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
புதுச்சேரியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 27, 2024 07:37 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரியில் வரும், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களிடையே பல்வேறு வழிமுறைகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, 100 சதவீத ஓட்டுப்பதிவு மற்றும் உண்மை செய்திகளை கண்டறியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மூலக்குளம், ஈஸ்ட் கோஸ்ட் நர்சிங் கல்லுாரி மற்றும் ரெட்டியார் பாளையம், போப் ஜான் பால் கல்லுாரியில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், 'ஸ்வீப்' மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், வாக்களிக்க தவறினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் கூறினார்.
இதில், நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார், இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ஈ.வி.எம்., வி.வி.பேட், 1950 அழைப்பு மையம் பற்றிய தகவல்களை வாக்காளர்களுக்கு விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தேர்தல் நேரத்தில் நிறைய போலியான அல்லது பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதில் உள்ள உண்மை தகவல்களை கண்டுபிடிக்கவும் அதை மட்டுமே நம்ப வேண்டும் என்கிற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

