/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்
/
ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 10, 2024 01:53 AM

புதுச்சேரி : ஏனாம் பகுதியில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏனாம் கோதாவரி ஆற்று பகுதியில் நேற்று மதியம் மது பாட்டில்கள் கடத்துவதாக ஏனாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஏனாம் எஸ்.பி., உத்தரவின் பேரில் ஏனம் போலீசார் கோதவாரி ஆற்றுப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது மது கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் போலீசாரை கண்டவுடன் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து ஏனாம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் கடத்த முயன்ற 180 எம்.எல்., கொண்ட , 160 பாட்டில், 200 லிட்டர் சாராயம் கேன் 428 லிட்டர் பாட்டில் சாராயம் என ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

