ADDED : மார் 27, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மா.கம்யூ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரி காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
மா., கம்யூ., தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மதிவாணன், ராம்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
பொதுக்கூட்டத்தில், மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

