sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

உங்களில் ஒருவன்: உதயநிதி பிறந்த நாளில் 622 நிகழ்ச்சி நடத்தியதே அமைச்சரின் சாதனை!

/

உங்களில் ஒருவன்: உதயநிதி பிறந்த நாளில் 622 நிகழ்ச்சி நடத்தியதே அமைச்சரின் சாதனை!

உங்களில் ஒருவன்: உதயநிதி பிறந்த நாளில் 622 நிகழ்ச்சி நடத்தியதே அமைச்சரின் சாதனை!

உங்களில் ஒருவன்: உதயநிதி பிறந்த நாளில் 622 நிகழ்ச்சி நடத்தியதே அமைச்சரின் சாதனை!


ADDED : ஜன 28, 2024 03:10 AM

Google News

ADDED : ஜன 28, 2024 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவபெருமான் சைவ சமயத்திற்கு திருநாவுக்கரசரை ஆட்கொண்ட, அற்புதக் கோவிலான திருவதிகை வீரட்டானேஸ்வரர் குடிகொண்டிருக்கும் பண்ருட்டி தொகுதியிலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் முயற்சியால், 1957ல் உருவான பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைந்திருக்கும் நெய்வேலியிலும், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட, பழமை மாறாது, வளர்ச்சியில்லாது வாடும் குறிஞ்சிப்பாடியிலும் பா.ஜ., நடத்தும் பாதயாத்திரைப் பயணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முன்வராத கட்சிகள்


பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 150 கிராமங்களில், 1,000 ஏக்கர் அளவிற்கு பலாப்பழ சாகுபடி நடக்கிறது. 40,000 ஏக்கர் அளவிற்கு முந்திரி சாகுபடி நடக்கிறது ஆனால், பலாப்பழம் மற்றும் முந்திரிக்கான மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அமைத்து, அவற்றின் வாயிலாக மக்களின் வருமானத்தை மேம்படுத்த, தமிழக கட்சிகள் முன்வரவில்லை.பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், 'தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் திமிருடனும்; அகம்பாவத்துடனும் நடந்து கொள்கின்றனர். தொகுதி விஷயமாக அமைச்சரைச் சந்தித்தால் ஏளனமாக பேசுகிறார்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவருக்கே அந்தகதி என்றால், சாதாரண மக்களை தி.மு.க., அரசு எப்படி நடத்தும்?முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் அனைவரும் ஏமாற்றுகின்றனர். கடலுார் 28வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் கோ.சக்திவேலின் வார்டில் சாலைகள் அமைக்காமலேயே, சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டியுள்ளனர். இதை எதிர்த்து மாமன்றத்தில் பேசிய அவரை, தகுதி நீக்கம் செய்திருக்கின்றனர்.

இதற்கு உடந்தையாக இருப்பது, மாவட்ட அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன். தன்னுடைய மகனுக்கு, கடலுார் லோக்சபா தொகுதியை பெற, அமைச்சர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக என்ன செய்வதென்று புரியாமல், இதை செய்து கொண்டிருக்கின்றனர்.

துணை நிற்போம்


கடந்த 1989 முதல் 2023 வரை, இப்பகுதியில் எல்.எல்.சி., திட்டங்களுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒரு புதிய இடஒதுக்கீடு முறையை, அந்நிறுவனம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 4 ஆண்டுகளில் காலியாகும், 4,036 பணியிடங்களில், நிலம் கொடுத்த உரிமையாளர்கள் அல்லது குடும்பத்தினரை பணியமர்த்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு, தமிழக பா.ஜ., துணை நிற்கிறது.

வேலை வேண்டாம் என்பவர்களுக்கு, வாழ்வாதாரமாக தற்போது வழங்கும் தொகையான 17 லட்சத்திலிருந்து, 35 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கி தர வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை, என்.எல்.சி., நிறுவனம் ஏற்று செயல்படுத்த வேண்டும். தடை நீங்குமா?

கடந்த 1989 முதல் 2023 வரை, நிலத்திற்கு ஒரு தவணை மற்றும் எந்தவித பணமும் வாங்காமல் இருப்பவர்களுக்கு, தற்போது உள்ள சந்தை மதிப்பு நிலவரப்படியும், புதிதாக நிலம் கையகப்படுத்தும்போது, மத்திய அரசு வழிமுறைப்படி, 90 சதவீதம் நிலம் உரிமையாளர்களின் ஒப்புதல் படியும், இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

மும்முடிச் சோழகன், கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில், 23 ஆண்டுகளாக பட்டாப்பெயர் மாற்றத்திற்கு, என்.எல்.சி., நிறுவனம் தடை விதித்துள்ளதால், வங்கிகளில் விவசாயத்திற்காக கடனுதவி உள்ளிட்ட,மத்திய அரசு சலுகைகள் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அதை சிக்கலின்றி என்.எல்.சி., நிறுவனம் வழங்கவேண்டும் என பா.ஜ., வலியுறுத்துகிறது.

'ஸ்டிக்கர்' ஒட்டுவது தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர், குறிஞ்சிபாடி தொகுதி சட்டசபை உறுப்பினர்.

அவர் செய்த பணிகள்:

l விவசாய நிலங்களில், 'சிப்காட்' தொழில் வளாகம் அமைத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்பது

l நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம், ஒரு மூட்டைக்கு 60 முதல் 80 ரூபாய் லஞ்சம் வசூலிக்கும் நிலைமையை உருவாக்கியது

l நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய், கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது

l மத்திய அரசின் திட்டங்களில் மேல்

'ஸ்டிக்கர்' ஒட்டுவது.

இப்படி மக்கள் விரோதமாக செயல்படுவதே. வேளாண் துறை அமைச்சராக, இவர் செய்த

பணிகள்.

அதைக் காட்டிலும், அமைச்சர் உதயநிதி பிறந்த நாளுக்காக, ஒரே நாளில் கடலுாரில், 622 நிகழ்ச்சிகளை நடத்தியது தான் இவருடைய பெரிய சாதனை.

பயணம் தொடரும்...






      Dinamalar
      Follow us