sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/மோடி ' மேஜிக் '; கரையுது ' லாஜிக் '

மோடி ' மேஜிக் '; கரையுது ' லாஜிக் '

மோடி ' மேஜிக் '; கரையுது ' லாஜிக் '


UPDATED : பிப் 27, 2024 02:34 AM

ADDED : பிப் 27, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2024 02:34 AM ADDED : பிப் 27, 2024 12:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சித்ராக்கா... இன்னைக்கு பல்லடம், மாதப்பூர்ல, பிரதமர் மோடி பங்கேற்கிற பொதுக்கூட்டம் நடக்குது... ஆனா, ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே திருப்பூரும், பல்லடமும் களைகட்டிடுச்சே...''

''ஆமா மித்து... பிரமாண்டமா ஏற்பாடு செஞ்சிருக்காங்க... லோக்சபா தேர்தலுக்கான, தமிழ்நாட்டுல நடக்கிற முதல் பா.ஜ., பொதுக்கூட்டம் இதுதானே... லட்சக்கணக்குல தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்ட, ராப்பகலா களத்துல இறங்கி வேலை செய்றாங்க கட்சிக்காரங்க...''

''அண்ணாமலையோட யாத்திரை ரெண்டு, மூணு தடவை திருப்பூர்ல தள்ளிப்போச்சுக்கா; இது ஒரு வகையில நல்லதுதான் போல... ஏன்னா, யாத்திரை நிறைவு விழா இங்கதான நடக்குது...''

''சரியா சொன்ன மித்து... இன்னைக்குத் திருப்பூர்ல பிரதான சாலைகள்ல அண்ணாமலை வலம் வரப்போறாரு... அப்படியே பொதுக்கூட்ட மேடைக்குப் போயிடறாரு''

“திருப்பூர் லோக்சபா தொகுதில ஓட்டுக்களை அள்றதுக்கு மோடி பங்கேற்கிற பொதுக்கூட்டம் உதவுமாக்கா?''

''மித்து... அதுல சந்தேகமே இல்ல... நிச்சயமா ஒரு 'மாஸ்' உருவாக்கி இருக்காங்க... மோடி 'மேஜிக்' இங்க நடக்குமான்னு பார்க்கணும்...''

''சித்ராக்கா... வழக்கமா, பா.ஜ.,வை எதிர்த்து பேசுற கட்சிக்காரங்க கூட, திருப்பூர்ல அடக்கித்தான் வாசிக்கிறாங்க... 'லாஜிக்', 'பாலிசி'ன்னு முழங்கறவங்ககூட சத்தம் காட்டாமத் தான் இருக்காங்க...''

''மோடி 'மேஜிக்'ல கட்சிகளோட 'லாஜிக்' கரைஞ்சுரும்னு சொல்றியா''

கலகலவென சிரித்தாள் மித்து.

புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்


''மித்து... திருப்பூர்ல நீண்ட நாள் கோரிக்கையா இருந்த இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மோடி 'வீடியோ கான்பிரன்ஸ்' மூலமா திறந்திருக்காரு... இதனால 3 லட்சம் தொழிலாளர் பயன்பெறுவாங்க...''

''சித்ராக்கா... இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழாவுல திருப்பூர்ல ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - இந்திய கம்யூ., எம்.பி., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்னு ஒருத்தருமே கலந்துக் கலையே...

''சில மாசங்களுக்கு முன்னாடி திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல 'அம்ரித் பாரத்' திட்டம் மூலமா புனரமைப்புப்பணி துவக்க விழா நடந்துச்சுல்ல... அதுலயும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜய குமார் மட்டும் தான் கலந்துகிட்டாரு''

''ஆமா மித்து... அப்ப, அ.தி.மு.க., - பா.ஜ., உறவுல இருந்தாங்க... இப்ப இல்லையே... அதனால, விஜயகுமாரும் இந்த முறை புறக்கணிச்சுட்டாரு போல''

''சித்ராக்கா... இதுல என்ன ஆச்சர்யம்னா... எக்ஸ் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் ம.தி.மு.க., அவைத்தலைவருமான துரைசாமி, விழாவுல கலந்திருக்காரே... தொழில்துறையினர் சிலரும் கலந்திருக்காங்க...''

''எது எப்படியோ, இ.எஸ்.ஐ., மருத்துவமனை திருப்பூர் மாவட்ட மக்களுக்கு உதவிகரமா இருக்கப்போகுது... கோயமுத்துாருக்கு சிகிச்சைக்காக போக வேண்டியதில்ல... இது எவ்வளவு பெரிய நன்மை''

சித்ராவிடமும், மித்ராவிடமும் திருப்தி.

திண்ணைப் பிரசார 'டெக்னிக்'


''மித்து... மோடி வருகைன்னாலே பா.ஜ., காரங்க ஸ்பீடா தேர்தல் வேலைல இறங்கிருவாங்க அப்படிங்கறதுனால, தி.மு.க., - அ.தி.மு.க., காரங்க இப்பவே தேர்தல் வேலைல ஜரூர் காட்றாங்க...''

''சித்ராக்கா... திண்ணைப்பிரசார டெக்னிக்கை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கடைபிடிக்கப்போறாங்க... நாம் தமிழரும் தொழில் வளத்தோட மண், நீர் வளப் பாதுகாப்புன்னு 'வேற லெவல்'ல பிரசாரத்துல களமிறங்கப் போறாங்களாம்''

''மித்து... யாரு என்ன பண்ணப்போறாங்கன்னு பாக்கத் தானே போறோம். தேர்தல் எப்போ; வேட்பாளர் யாருன்னு தெரிஞ்சுக்க இப்பவே சுவாரசியமா இருக்கு...''

''நீங்க இப்படிச் சொல்றீங்க... வாக்காளர்கள் பலரும், ஓட்டுக்கு நோட்டு கொடுப்பாங்களான்னு எதிர்பார்த்துட்டு பரபரப்போட இருக்காங்க...''

''மித்து... நீ சொல்றது உண்மைதான். ஆனா, இப்ப இருக்கிற 'யூத்' அப்படி இருக்க மாட்டாங்கன்னு நம்பலாம். அவங்க கட்சியைப் பார்க்காம நேர்மையான கட்சி எது; வேட்பாளர் நல்லவரான்னு ஆராயத் துவங்கறாங்க... இது நாட்டோட எதிர்காலத்துக்கு ரொம்ப நல்லது''

சித்ராவிடம் நம்பிக்கைக்கீற்று.

''மித்து... திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'ப்ரீ சிக்னல்' முறையில சோதனை முயற்சி நடந்ததுல்ல...

''சில போலீஸ்காரங்க, பெட்ரோல் விக்குற விலைக்கு சுத்தி வர்றது தேவையான்னு அதிருப்தி தெரிவிச்சு, சமூக வலைதளங்கல்ல பதிவிட்டாங்களாம். மக்களே வரவேற்கறப்ப, போலீஸ்காரங்க இப்படிச் சொல்லலாமான்னு மக்கள் கேள்வி கேட்கறாங்க...''

''ஆமாக்கா... மாநகர்ல மையத்துல இருக்கற ஸ்டேஷன்ல வழக்கு தொடர்பா பறிமுதல் செய்ற வாகனங்கள்ல பாதியை இடம் இல்லாம ராயபுரம் பகுதில நிறுத்திஇருக்காங்க...

''இதுல வாகனம் திருடு போறதும், அதே வாகனம் மீண்டும் அதே இடத்துக்கு வர்றதும் நடக்குதாம். இது, சில போலீஸ்காரங்களோட வேலைன்றாங்க...''

''அட... இப்படி வேற நடக்குதா''

வியப்புற்றாள் சித்ரா.

துாக்கியடிக்கப்பட்ட தாசில்தார்


''மித்து... பெண் துணை தாசில்தார் ஒருத்தருக்கு வீரபாண்டில இடம் இருக்கு. அதை தொழிற்சாலை நடத்த மூணு வருஷத்துக்கு வாடகை ஒப்பந்தம் போட்ருக்காங்க...

''ஆனா ஒரே வருஷத்துல காலி பண்ணச் சொன்னாராம். 'நாலு கோடி ரூபா முதலீடு போட்ருக்கோம். பவரை வச்சி எங்கள விரட்டிட்டாரு... அட்வான்ஸ் தொகையை திருப்பித்தரல'ன்னு கலெக்டர்ட்ட புகார் போச்சாம்.

''வார்ன் பண்ணுன கலெக்டர், தாசில்தாரை உடுமலைக்குத் துாக்கியடிச்சுட்டாராம்''

தானே 'டிரான்ஸ்பர் ' ஆர்டர் போட்டது போல சித்ரா பெருமிதப்பட்டாள்.

''சித்ராக்கா... மாநகராட்சில ஆளும் கட்சி பெண் கவுன்சிலரு மண்டலப் பொறுப்புல இருக்காரு. மண்டல ஆபீசுக்கு இவரோட கணவர், நாள் தவறாம ஆஜராயிடறாரு... மனுக்கள் கொடுத்தாலும் இவர் தான் வாங்குறாரு...

''சமீபத்தில பா.ஜ., காரங்க மனு கொடுக்க போனப்பவும், இவர் தான் மனுவையே வாங்கியிருக்காரு... நடவடிக்கை எடுக்கறேன்னு உறுதி வேற கொடுக்குறாரு...

''மண்டலப்பகுதில வார்டு வளர்ச்சிப்பணி தொடர்பா ஆய்வுக்கூட்டம் நடத்துறப்பவும், தான் சொல்ற பணிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கணும்னு மல்லுக்கட்டுறாராம்''

''மித்து... கவுன்சிலர்களின் கணவர்களோட ராஜ்யத்தைக் கட்டுப்படுத்துறதென்னவோ கஷ்டம்தான்''

வச்சுட்டாங்கய்யா 'ஆப்பு'


''சித்ராக்கா... அங்கே... இங்கேன்னு இடம் மாறுன திருப்பூர் பூ மார்க்கெட் வியாபாரிகள் சில பேரு, கடைசில கூட்டுறவு விற்பனைச்சங்க வளாகத்துல கடை போட்டாங்க... இப்ப அதுக்கும் வச்சுட்டாங்க 'ஆப்பு'...

''மலர் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கடை நடத்த கொடுத்த உத்தரவுகளை ரத்து செஞ்சு கூட்டுறவுத்துறை கடிதம் அனுப்பிச்சுடுச்சாம்; கோர்ட்டிலும் சமர்ப்பிச்சுட்டாங்களாம். இதனால, இவங்கள்ல பலரும் கடைகளை காலி செஞ்சிட்டாங்களாம்''

''மித்து... திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறைல இணை இயக்குனரா இருந்தவரை சென்னைக்கு மாத்திட்டாங்க. அவரு, இனி, ரெண்டு மாசத்துல ரிட்டையர்டு ஆகப் போறாராம். அவருக்கு பதிலா வரப்போற ஆபீசர், 'ரிட்டையர்டு' ஆகறதுக்கு, மூணே மாசம் தான் இருக்காம்.

''அவருக்கு அடுத்த நிலையில துணை இயக்குனர் பொறுப்பை நல்ல படியா கவனிச்சுட்டு இருந்த இன்னொரு ஆபீசரும், இந்த மாசம் 'ரிட்டையர்டு' ஆயிடுவாராம்''

''சித்ராக்கா... இப்படிப்பட்டவங்கள ஆபீசரா போட்டா, அவங்க பாதி நாள் லீவுல தான் இருப்பாங்க. மீதி நாள் ஆய்வுக்கூட்டம், அது, இதுன்னு நாளை நகர்த்திடுவாங்க. அப்போ, விவசாயிகளோட பிரச்னைகளை எப்படி, கவர்மென்ட் கவனத்துக்கு கொண்டு போவாங்கன்னு தெரியலையே''

கவலைப்பட்டாள் மித்ரா.

சித்ரா 'ஜில்'லென மோர் கொண்டு வந்தாள். வெயிலுக்கு இதமாய் மோரை, இருவரும் பருகத்துவங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us