தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தமிழகத்தில் நடப்பது ஜோதிடர் ஆட்சியா..?: அந்துமணி பதில்கள்

தமிழகத்தில் நடப்பது ஜோதிடர் ஆட்சியா..?: அந்துமணி பதில்கள்

தமிழகத்தில் நடப்பது ஜோதிடர் ஆட்சியா..?: அந்துமணி பதில்கள்

6


ADDED : அக் 27, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : அக் 27, 2026 05:34 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ராமானுஜன், பெங்களூரு:


'விளம்பரம் செய்யாமல் நாட்டுக்கு நல்லது செய்கிறோம்' என, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறாரே?



அடக்கமாக இருப்பதாக நினைத்துச் செயல்படும், பா.ஜ., கட்சியின் மிகப் பெரிய பலவீனம் இது. பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்களில் பெரும்பாலானவை குறித்து, மக்களால் அறிய முடியவே இல்லை. பா.ஜ.,வினரும் உரிய பிரசாரம் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. எதிர்க்கட்சிகளின் நெற்றிப் பொட்டில், 'பொளேர்' என, அடி கொடுக்கும் வகையில், பா.ஜ., செயல்பட்டால் தான், இனி, அதற்கு எதிர்காலம்! இல்லையெனில், கரப்பான்களும், கொசுக்களும் பெருகி, நாடு சின்னாபின்னமாகி விடும்!

எம்.பாஸ்கர், தஞ்சாவூர்:


'ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை, முதல்வர் விஜய்க்கு இல்லை' என்கிறாரே, த.வெ.க., அமைச்சர் பிரபு?



ஜெயலலிதாவின் உத்தியைப் பயன்படுத்துகிறாரோ இல்லையோ, அவரின் அறிவுத் திறனை, நினைவுத் திறனை, கண்டிப்பாக விஜய் பின்பற்றியே தீர வேண்டும். ஒருமுறை, காவிரி விவகாரம் குறித்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கோரிக்கை வைக்க, ஜெ., டில்லி சென்றார். அப்போது, பேச வேண்டிய விஷயங்களுக்கான குறிப்புகளை, அவருடைய பி.ஏ., எடுத்து வர மறந்து விட்டார். விடவில்லை ஜெயலலிதா... முதல்நாள் இரவு அதைப் படித்ததை நினைவில் வைத்து, 'பாயின்ட் பை பாயின்ட்' பேசி அசத்தினார். இந்த சாதுர்யம், விஜய்க்கு தேவை!

மு.மதிவாணன், தர்மபுரி:


'ராமர் வனவாசம் சென்றபோது, அவரது செருப்பு அயோத்தியை எப்படி ஆண்டதோ, அதேபோல், ஸ்டாலின் அவிழ்த்து வைத்த செருப்பு தான், இன்று தமிழகத்தை ஆட்சி செய்கிறது' என்கிறாரே, தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலர் திண்டுக்கல் லியோனி?



Image 1636596
தரமற்ற பேச்சையே தன் கொள்கையாக கொண்டவர் லியோனி. அதுவும் ஆட்சியை இழந்தபின், தி.மு.க., தலைவர் முதல் அனைவரும், திருமணம் போன்ற நிகழ்வுகளிலும், இப்படி எதிர்மறை அரசியலை தான் பேசுகின்றனர்.

கே.ஆர்.அசோகன், ஈரோடு:


அரசியலில் பேச்சு திறமையை வளர்த்து கொள்வது எப்படி?



பேச்சு திறமை என்பது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இருந்தது போல், பிறவி குணமாக தான் இருக்க முடியும்; இல்லை என்றால், துண்டு சீட்டு தான்!

வி.ஹம்சா, பெங்களூரு:


தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா என, கனிமொழி எம்.பி., கூறியுள்ளது பற்றி?



விஜய் மட்டுமா ஜோதிடத்தை நம்புகிறார். துர்கா ஸ்டாலின் செய்யாத பூஜை, பரிகாரங்களா... ஒட்டக பூஜை கூட செய்து பார்த்தாரே. அடுத்து, இப்போது ஈரோடு ஜோதிடர் கூறியதால், கட்சியை உதயநிதியிடம் ஒப்படைக்க வேண்டும் என, ஸ்டாலினை வற்புறுத்துகிறாரே...

அ.தி.மு.க.,வினர் செய்யாத யாகங்களா, பூஜைகளா... இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் கனிமொழி!

ப.லதா, சீர்காழி:


நகரங்களில் மழைநீர் தேங்குவதும், ஏரிகளில் குப்பைகள் கொட்டப்படுவதும் தொடரும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் அரசை மட்டும் குறை கூறுவது நியாயமா, பொதுமக்களும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமல்லவா?



கட்டாயமாக, பொதுமக்களும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், ஏரிகளிலும், குளங்களிலும் பிளாட் போட்டு விற்பவர்களும் திருந்த வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us