வடகிழக்கு மாநிலங்களை காக்க உருவானது... புதிய அலை!: அதிரடியாக கைகோர்த்த அரசியல் கட்சிகள்
வடகிழக்கு மாநிலங்களை காக்க உருவானது... புதிய அலை!: அதிரடியாக கைகோர்த்த அரசியல் கட்சிகள்
ADDED : நவ 08, 2025 11:21 PM

வடகிழக்கு மாநிலங்களில், திடீர் திருப்பமாக அங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து, ஒரே அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. எட்டு மாநிலங்களையும் இணைக்கும் வகையில், ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை ஏழு சகோதரி மாநிலங்களாக அழைக்கப்படுகின்றன.
சிக்கிம் மட்டும் சகோதர மாநிலமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள பழங்குடியினர், தங்கள் உரிமைகள், தேசிய கட்சிகளால் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பழங்குடியினருக்காக பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டாலும், அனைவருக்கும் பொதுவான அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்ற குரலும் ஒலிக்க துவங்கியது.
துணிச்சலான இயக்கம் புதிதாக தோற்றுவிக்கப்படும் அமைப்பால், நமக்கான உரிமைகள் நிலைநாட்ட முடியுமா என்ற சந்தேகத்தால், புதிய அணி உருவாவது சாத்தியமில்லாமல் இருந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிராந்திய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரே கட்சியாக செயல்பட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
மேகாலயா முதல்வர் கான்ராட் கே.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, திரிபுராவின் பிரத்யோத் தேவ்பர்மாவின், திப்ரா மோத்தா கட்சி, முன்னாள் காங்., தலைவர் டேனியல் லாங்க்தசா தலைமையிலான மக்கள் கட்சி மற்றும் நாகாலாந்தை சேர்ந்த முன்னாள் பா.ஜ., பேச்சாளர் எம்மோன்லுமோ கிகான் ஆகியோர் ஒன்றிணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பை டில்லியில் வெளியிட்ட கான்ராட் சங்மா, 'வடகி ழக்கின் பல்வேறு இன, மொழி, கலாசார குரல்களை ஒருங்கிணைக்கும் வரலாற்று முக்கியமான இந்த புதிய முயற்சியின் செயல் திட்டம், கொள்கை உள்ளிட்டவை அடுத்த 45 நா ட்களுக்குள் முடிவு செய்யப்படும்' என்றார்.
திப்ரா மோத்தா தலைவர் பிரத்யோத் தேவ்பர்மா கூறுகையில், 'எங்கள் உரிமைகளுக்காக, டில்லி அரசியல்வாதிகளிடம் நேரம் கேட்டு காத்திருந்து எந்த பயனும் இல்லை. எங்களுக்காக, நாங்களே பேச முடிவு செய்துவிட்டோம்.
'அதற்கான நேரமும் வந்துவி ட்டது. சட்டவிரோத குடியேற்றம், நில இழப்பு, அடையாள நெருக்கடி, ஊழல் மற்றும் கலாசார சிதைவு போன்ற சவால்கள் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் பொதுவாகவே உள்ளன. இவற்றைத் தீர் க்க, ஒருங்கிணைந்த துணிச்சலான இயக்கம் அவசியம்' என்றார்.
புதிய அமைப்பின் தலைவர்கள், 'வட கிழக்கின் குரல் ஒன்றாக ஒலிக்க வேண்டும். நாங்கள் எவருடனும் போராட வரவில்லை; பிராந்திய பிரச்னைகளை ஒன்றாக முன்வைக்க வருகிறோம். தனித்தனியாக நாம் எழுப்பிய குரல், மாற்றத்தை தரவில்லை.
'ஆனால், ஒன்றிணைந்து பேசினால், அது தேசிய அளவில் கேட்கப்படுவது உறுதி' என, கூறுகின்றனர்.
அதேசமயம் முக்கிய பிராந்திய கட்சிகளான மிசோர மின் ஆளும் சோரம் மக்கள் இயக்கம், நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக முன்னணி மற்றும் அசாமின் அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகள் இந்த ஒருங்கிணைப்புக்கு சம்மதிக்கவில்லை. இந்த கட்சி கள் அனைத்தும் பா.ஜ. , கூட் டணியில் உள்ளன.
புதிய அரிதாரம் கடந்த 2016ல், பா.ஜ., தலைமையில் 'நெடா' எனப்படும் வடகிழக்கு ஜனநாய க கூட்டணி உருவாக்கப்பட்டது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
இந் த கூட்டணி வாயிலாக, வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ., தன் வேரை விரிவாக்கி, பல மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 2023ல், மணிப்பூரில் மெய்டி - கூகி இனத்தவருக்கு இடையிலான மோதலுக்கு பி ன் நெடா உடைந்தது.
கூட்ட ணியில் இருந்த தேசிய மக்கள் கட்சி, மிசோ தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்தன. இந்த இரு கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே, முதல்வராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங் ராஜினாமா செய்தார்.
அசாமில், கால்நடை கடத்தலை கட்டுப்படுத்துவது மற்றும் கிறிஸ்துவ சிகிச்சை முறைகளை தடை செய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டன.
இது, கூட்டணியில் இருந்த பிற கட்சிகளை அதிருப்தி அடைய செய்தது. திரிபுராவில் திப்ரா மோத்தா மற்றும் பா.ஜ., இடையேயான உறவும் தளர்ந்துள்ளது.
கடந்தாண்டு கையெழுத்தான திப் ராசா ஒப்பந்தம் இன்னும் அமல் படுத்தப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது போன்ற விஷயங்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, புதிய இயக்கம் துவங்க காரணமாக அமைந்தது என, வடகிழக்கு மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்றாலு ம், இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய கட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இது வடகிழக்கு அரசியலில் ஒரு புதிய பரிமாணம்.
ஆனால், பன்மொழி, பல இன, மத அடையாளங்களை கொண்ட பிராந்தியத்தை ஒருங்கிணைத்து, தேசிய நலனுடன் இணைத்துச் செல்ல முடியுமா என்பது சவாலான விஷயமே.
வடகிழக்கு மாநிலங்கள் மொத்தம், 25 எம்.பி.,க் களை கொண்டுள்ளன. இதனால், தேசிய அரசியலிலும், இந்த புதிய அரசியல் அலை முக்கிய பங்காற்றவும் வாய்ப்பு உள்ளது.
வரு ம் மாதங்களில், இந்த புதிய கூட்டமை ப்பு எவ்வாறு வடிவம் பெறுகிறது, பா.ஜ., உள்ளிட்ட தேசிய கட்சிகள் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பதை பொறுத்தே, வடகிழக்கு அரசியல் கட்சிகளின் புதிய அரிதாரம், மக்களின் அங்கீகாரத்தை பெறுமா என்பது தெரிய வரும்.
- நமது சிறப்பு நிருபர் -

