sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

விஜய்க்கு வருவது காக்கா கூட்டம்; தி.மு.க., காட்டமான பதிலடி

/

விஜய்க்கு வருவது காக்கா கூட்டம்; தி.மு.க., காட்டமான பதிலடி

விஜய்க்கு வருவது காக்கா கூட்டம்; தி.மு.க., காட்டமான பதிலடி

விஜய்க்கு வருவது காக்கா கூட்டம்; தி.மு.க., காட்டமான பதிலடி

7


ADDED : செப் 21, 2025 04:05 AM

Google News

7

ADDED : செப் 21, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''த.வெ.க., தலைவர் விஜய்க்கு கூடுவது காக்கா கூட்டம்,'' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.

விஜய் பிரசாரம் குறித்து, அவர் அளித்த பேட்டி:


தி.மு.க.,வுக்கு கூடுவது கொள்கைக்கான கூட்டம்; மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம். விஜய் பிரசாரம் செய்யும் பகுதியில், நாங்கள் வேண்டுமென்றே மின்சாரத்தை நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு; அதற்கான அவசியம் இல்லை.

விஜய், போகும் இடங்களில் எல்லாம் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., அரசு எப்படி நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அதனால், விஜய் சொல்வது பொய் என்பதையும் மக்கள் உணருவர்.

எனவே, தமிழக அரசு மீது வம்படியாக பொய் குற்றச்சாட்டு கூறுவதை, விஜய் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; விமர்சனங்களை வைக்கலாம் தவறில்லை. ஆனால், பக்குவமான அரசியல்வாதியாக எல்லாரும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:


நாகையில் இருக்கும் மருத்துவமனை வேறு; நாகூரில் உள்ள மருத்துவமனை வேறு. நாகை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு டாக்டர்கள் இல்லை.

அதில் இருந்து, 8 கி.மீ., துாரத்தில், நாகூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 500 படுக்கை வசதிகளுடன், பிரசவத்திற்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று விஜயை பார்க்க சொல்லுங்கள் அல்லது அவரது கட்சியினரை சென்று பார்க்க சொல்லுங்கள்.

நாகூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லை என்று விஜய் சொல்வது, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பது போல் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us