sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதி மட்டுமே: திமுக கறார் பேச்சு

/

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதி மட்டுமே: திமுக கறார் பேச்சு

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதி மட்டுமே: திமுக கறார் பேச்சு

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதி மட்டுமே: திமுக கறார் பேச்சு

14


UPDATED : பிப் 28, 2026 12:43 PM

ADDED : பிப் 28, 2026 05:14 AM

Google News

14

UPDATED : பிப் 28, 2026 12:43 PM ADDED : பிப் 28, 2026 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தி.மு.க.,விடம் எண்ணிக்கை அடிப்படையிலான பேச்சு இன்னும் தொடர்கிறது,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர், தி.மு.க., குழுவினருடன் நேற்று பேச்சு நடத்தினர்.



பின், வீரபாண்டியன் கூறியதாவது: தொகுதி எண்ணிக்கை சம்பந்தமான பேச்சு தான் இன்னும் தொடர்கிறது. ஏற்கனவே கூடுதல் தொகுதிகள் வேண்டும் என கூறியிருக்கிறோம்; அதற்கான அடுத்தகட்ட பேச்சு நடக்கவுள்ளது. ஏற்கனவே தந்த தொகுதிகளை குறைப்பது தொடர்பாக தி.மு.க., எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அக்கட்சியை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் தலைமையிலான குழுவினர், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தினர்.



சண்முகம் கூறியதாவது: பேச்சு சுமுகமான முறையில் நடந்தது. கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம். முதல்வருடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக கூறினர். தொகுதிகள் சம்பந்தமான எந்த பட்டியலும் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளுடன் நேற்று, தி.மு.க., குழுவினர் பேச்சு நடத்தினர்.



அக்கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: தி.மு.க., கூட்டணிக்கு பன்னீர்செல்வம் வந்ததை வரவேற்கிறோம். வரும் சட்டசபை தேர்தலுக்கு பின், கொங்கு மண்டலம் எங்கள் கூட்டணியின் கோட்டையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா நான்கு இடங்களை மட்டுமே ஒதுக்க இருப்பதாக திமுக தரப்பில் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us