ADDED : நவ 24, 2024 01:21 AM

புதுடில்லி: வட மாநிலங்களில் உள்ள, பெரும்பாலானோர் பக்தியில் அதிக கவனம் செலுத்தி வருபவர்கள்; ராமர் மீது அதிக பக்தி உடையவர்கள். குறிப்பாக, ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிப்பவர்கள்.
அத்துடன், அனுமன் சாலிசாவையும் படிப்பர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சுந்தர காண்டம் படித்து வருகிறார்.
டில்லியில் உள்ள அமித் ஷாவின் பங்களாவில் பூஜை அறை உள்ளது; அவர், தினமும் பூஜை செய்த பின்தான், வேலையைத் துவங்குவார். காசியிலிருந்து மூன்று பண்டிதர்களும், காஞ்சிபுரத்திலிருந்து இருவரும் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், அமித் ஷாவின் பூஜை அறையில் தினமும் சுந்தர காண்டம் படித்து வருகின்றனர்.
சமஸ்கிருதத்தில் உள்ள சுந்தர காண்டம் குறித்து, இவர்களிடம் ஹிந்தியில் விளக்கங்களை கேட்டு அறிந்து கொள்கிறார். நாள் முழுதும் இந்த பூஜை அறையில் சுந்தர காண்டமும், அனுமன் சாலிசாவும் ஒலிக்கிறதாம்.
ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின்போதும், சுந்தர காண்டம் மற்றும் அனுமன் சாலிசாவை படிப்பதை நிறுத்தவில்லையாம் அமித் ஷா.

