குளறுபடியற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றணும்: ஸ்டாலின் கோரிக்கை
குளறுபடியற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றணும்: ஸ்டாலின் கோரிக்கை
ADDED : செப் 07, 2026 05:17 AM

சென்னை: 'குளறுபடிகளுக்கு இடம் தராமல், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, தி .மு.க., தலைவர் ஸ்டாலின் வ லியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை கணக்கிட, ஜாதி பட்டியல் பயன்படுத்தப்படாது எனவும், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வகுப்புகள் தானே தவிர, ஜாதிகள் அல்ல எனவும், மத்திய அரசு தரப்பில் தரப்பட்ட விளக்கம் ஏற்புடையது அல்ல.
மாநில அரசுகளுடன் ஆலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜாதிகளின் பட்டியலை பெற்று, அதில் ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பை, மக்களுக்கு வழங்கும் வழிமுறை தான், குழப்பங்களுக்கு இடம் தராது.
மாறாக, மக்கள் கூறும் ஜாதி பெயரை பதிவேற்றுவது, இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் இருப்பதாக, குளறுபடியான கணக்கு வரும்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கமே, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்து கொள்வது தான்.
அப்போது தான் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கொள்கைகளை வகுத்து, தேவையான திட்டங்களை தீட்ட அரசுகளால் இயலும். எனவே, தற்போதைய முறையை தொடர்ந்தால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக செலவிடப்படும், 12 ஆயிரம் கோடி ரூபாயும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்க ளின் உழைப்பும் வீணடிக்கப்படும்.
பொருத்தமற்ற விளக்கங்களை கூறி தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், ஜாதிவாரி கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே, இதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
