sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 மதுரவாயல் தொகுதியில் ஒரே நபருக்கு '8 ஓட்டுகள்'!

/

 மதுரவாயல் தொகுதியில் ஒரே நபருக்கு '8 ஓட்டுகள்'!

 மதுரவாயல் தொகுதியில் ஒரே நபருக்கு '8 ஓட்டுகள்'!

 மதுரவாயல் தொகுதியில் ஒரே நபருக்கு '8 ஓட்டுகள்'!

10


ADDED : பிப் 27, 2026 06:01 AM

Google News

10

ADDED : பிப் 27, 2026 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மதுரவாயல் சட்டசபை தொகுதியில் ஒரே நபரின் பெயர் எட்டு முறை இடம்பெற்றிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி எஸ்.ஐ.ஆர்., பணி நிறைவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மதுரவாயல் தொகுதி 150வது வார்டு, காரம்பாக்கம், பாகம் எண்: 80-ல் ஒரே நபரின் பெயர் எட்டு முறை தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை எண்களுடன், பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறப்பு திருத்தப் பணி முடிந்த பின் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலிலேயே, இத்தகைய குளறுபடி ஏற்பட்டிருப்பது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வர் மக்கர்?


இது குறித்து மதுரவாயல் வட்டாட்சியர் கூறுகையில், 'வாக்காளர் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட, 'சர்வர்' கோளாறு காரணமாக, ஒரே நபரின் பெயர் பலமுறை பதிவாகியிருக்க வாய்ப்பு உள்ளது.

சம்பந்தப்பட்ட பாகத்தின் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம் பெற்றுள்ள ஒரே நபரின் பெயர் நீக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us