UPDATED : ஏப் 24, 2024 03:58 AM
ADDED : ஏப் 23, 2024 11:48 PM

சட்டசபை தொகுதிகள் வாரியாக பதிவான ஓட்டுக்கள் அடிப்படையில், தி.மு.க., எடுத்த சர்வேயில், 11 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கும்-, பா.ஜ.,வுக்கும் இடையே 2 - 3 சதவீதம் வித்தியாசமே உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு முடிந்த பின் எடுக்கப்பட்ட கணக்கு அடிப்படையில், 40 லோக்சபா தொகுதிகளில், தி.மு.க., முன்னிலையில் உள்ளதாக தெரியவந்தது.
ஆனால், சட்டசபை தொகுதிகள் வாரியாக பதிவாகியுள்ள ஓட்டு சதவீதம் அடிப்படையில் எடுத்த கணக்கில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 2, 3 சதவீதமும், அதிகபட்சமாக 10 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது.
நாமக்கல், கோவை, திருப்பூர், சிதம்பரம், ஈரோடு ஆகிய ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே குறைந்த ஓட்டுவித்தியாசமே உள்ளது.
வேலுாரில் பா.ஜ.,வும், தர்மபுரியில் பா.ம.க.,வும், திருநெல்வேலியில் பா.ஜ.,வும், விருதுநகரில் தே.மு.தி.க.,வும், தி.மு.க.,வுக்கு கடும் போட்டியை தருகின்றன.
அதேபோல், வட சென்னை, காஞ்சிபுரத்திலும் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் மாறலாம் என்றும் அதில்கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தவட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

