UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 11:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி, 13வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்-பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட அறிவுசார் மையம் மற்றும் நுால-கத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புத்தகம், இணையதள சேவையுடன், 5 கணினி மூலம் மாணவர்கள் படிக்கின்றனர்.
தினமும், 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்து செல்லும் நிலையில், அவர்கள் அமர போதிய இருக்கைகள் இல்லை. இதனால் சிலர் தினமும் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. மேலும் பை வைக்க தனி ரேக் இல்லாததால், ஒரே இடத்தில் குவித்து வைக்கின்றனர்.இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் காஞ்சனா கூறுகையில், இருக்கை வசதிக்கு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

