வரும் 27, 28ல் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு
வரும் 27, 28ல் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு
UPDATED : டிச 22, 2025 07:13 AM
ADDED : டிச 22, 2025 07:14 AM
விழுப்புரம்:
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அத்தேர்வானது நிர்வாக காரணங்களால் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடசென்னை, அம்பத்துார், கோயம்புத்துார், திருப்பூர், கடலுார், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஓசூர், உளுந்துார்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலுார், நாமக்கல் ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் நடக்கிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த ஐ.டி.ஐ., மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

