sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடைகால பயிற்சி துவக்கம்

கோடைகால பயிற்சி துவக்கம்

கோடைகால பயிற்சி துவக்கம்


UPDATED : ஏப் 17, 2026 05:13 PM

ADDED : ஏப் 17, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 05:13 PM ADDED : ஏப் 17, 2026 05:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம், ஏப்ரல் 17ல் துவங்கி, வரும் மே 1 வரை நடக்கிறது.

இது குறித்து, கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில், கோடைகால பயிற்சி முகாம், மாவட்ட விளையாட்டு வளாகத்தில், வரும் 17ம் தேதி துவங்கி, மே 1 வரை நடக்க உள்ளது. இதில், தடகளம், கபடி, கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகள் நடக்க உள்ளது.

இப்பயிற்சி முகாமில், பள்ளி, கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர், 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்படும். இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆனந்த் என்பவரது மொபைல் எண்ணிற்கு 7401703461 தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனையர், அதிக அளவில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us