sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்

தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்

தொல்லியல் எச்சங்களை பார்வையிட்ட மாணவியர்


UPDATED : பிப் 28, 2026 02:15 PM

ADDED : பிப் 28, 2026 02:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2026 02:15 PM ADDED : பிப் 28, 2026 02:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துார் மற்றும் எட்ரப்பள்ளியில் உள்ள தொல்லியல் எச்சங்களை, அரசு கலைக்கல்லுாரி மாணவியர் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா வழிகாட்டுதலின்படி, கல்லுாரியில் தொல்லியல் மரபு மன்றம் அமைக்கப்பட்டது. மன்றத்தின் சார்பாக கடந்த 3, 4ம் தேதிகளில் தொல்லியல் குறித்த கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, குறும்படம் தயாரித்தல், கல்வெட்டு பயிற்சி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.

இதில் அரசு ஆடவர் கல்லுாரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் தொல்லியல் வல்லுனர்கள் கோவிந்தராஜ், பரந்தாமன், தமிழ்செல்வன், விஜயகுமார் ஆகியோர் பேசினர்.

கடந்த, 24ல், கல்லுாரியின் அனைத்து துறைகளை சேர்ந்த, 110 மாணவியர் தொல்லியல் எச்சங்களை பார்வையிட சின்னகொத்துார் மற்றும் எட்ரப்பள்ளி ஆகிய இடங்களுக்கு பேராசிரியர்கள் கனகலட்சுமி, பரமகுரு, மஞ்சுநாத், சவுபாக்யா, நந்தினி, அம்ரீன், சரசு, சுபேதா, ரேவதி ஆகியோர் கொண்ட குழுவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.

முதலில் சின்னகொத்துாரில் பழமை வாய்ந்த சிவன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள மண்டபங்கள், அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் ஆகியவை குறித்து வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். பின்னர், எட்ரப்பள்ளியில் உள்ள கல்திட்டை, கோட்டை அதன் சிறப்பு குறித்தும், பயன்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us