sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எச்சரிக்கையுடன் இருங்கள் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

எச்சரிக்கையுடன் இருங்கள் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

எச்சரிக்கையுடன் இருங்கள் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை


UPDATED : ஜன 10, 2026 08:42 AM

ADDED : ஜன 10, 2026 08:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 08:42 AM ADDED : ஜன 10, 2026 08:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எரியோடு:
'கெட்ட விஷயங்களுக்குள் எளிதில் சிக்கிவிடும் ஆபத்து அதிகம் உள்ளதால் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார்.

எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய அவர் பேசியதாவது:


எவ்வளவோ நல்ல, கெட்ட விஷயங்கள் அதிகளவில் மாணவர்களை சுற்றியும், நெருங்கியும் உலா வருகின்றன. அன்ன பறவை எப்படி தனக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு மற்றவற்றை உடனே வெளியேற்றுவதை போல் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கல்விக்காக அரசு வழங்கும் எல்லா உதவிகளை பயன்படுத்தி உயர்ந்த பதவிகளை பெற்று வாழ்வில் உயர்வதுடன், உங்கள் குடும்பம், தெரு, ஊர், மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இதை உறுதிமொழியாக இன்று ஏற்க வேண்டும் என்றார்.

பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நிர்மலா, தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, ரவிசங்கர், கார்த்திகேயன், செந்தில்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us