UPDATED : அக் 27, 2025 08:21 AM
ADDED : அக் 27, 2025 08:29 AM
வடவள்ளி:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, மருதமலை சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், கடந்த 22ம் தேதி, காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது.
இந்நிலையில், கந்த சஷ்டி விழாவையொட்டி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ந டந்தது. இதில், மருதமலை சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 108 மாணவ, மாணவிகள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

