sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கற்றல், கற்பித்தல் போட்டி மாணவர்கள் அபாரம்

கற்றல், கற்பித்தல் போட்டி மாணவர்கள் அபாரம்

கற்றல், கற்பித்தல் போட்டி மாணவர்கள் அபாரம்


UPDATED : மார் 24, 2025 12:00 AM

ADDED : மார் 24, 2025 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2025 12:00 AM ADDED : மார் 24, 2025 11:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சூலுார்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கற்றல், கற்பித்தல் போட்டிகள் அக்கநாயக்கன்பாளையத்தில் நடந்தது.

சுல்தான்பேட்டை வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலையோடு விளையாடு எனும் கற்றல், கற்பித்தல் முறைகளை ஊக்குவிக்கும் போட்டிகள், அக்கநாயக்கன்பாளையம் கமலாலயம் பள்ளி வளாகத்தில் நடந்தது.ஒன்றியத்தில் உள்ள, 12 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். குழுவாக இணைந்து செயல்படும் முறை, பாடங்களை எளிதாக புரிந்து கொண்டு ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் வகையில் போட்டிகள் அமைந்திருந்தன.

கல்வி திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் புதுமையான கற்பித்தல் முறைகளை பயன்படுத்த ஊக்கமளிக்கும் வகையில், பல்வேறு கலை சார்ந்த போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். முடிவில் வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ், ரவிசந்திரன், அரசு ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

மாநில திட்ட அலுவலர் பரத்ராம், செல்வகணேஷ்,கார்த்திக் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us