தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணிதத்தில் தடுமாறும் இன்ஜி., மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு

கணிதத்தில் தடுமாறும் இன்ஜி., மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு

கணிதத்தில் தடுமாறும் இன்ஜி., மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு


UPDATED : செப் 28, 2026 01:37 PM

ADDED : செப் 28, 2026 01:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 01:37 PM ADDED : செப் 28, 2026 01:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணிதம் மற்றும் ஆங்கில பாடத்தில் தடுமாறும், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், நான்கு வளாக கல்லுாரிகள் மற்றும் 16 உறுப்பு கல்லுாரிகளில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர், பி.இ., பி.டெக்., படித்து வருகின்றனர். முதலாம் ஆண்டில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, அண்ணா பல்கலை தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கணித பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கணிதம் சார்ந்த குறிப்பிட்ட பாடப்பிரிவில், 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினால், அதிகபட்சம் 800 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.

கணித பாடத்தில் தடுமாறும் மாணவ, மாணவியரை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அண்ணா பல்கலை, நான்கு வளாக கல்லுாரிகள், 16 உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவியரின், கணித பாடத்திறன் மற்றும் ஆங்கில மொழி திறன் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

கணித பாடத்தில் திணறும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திட, பல்கலை முடிவு செய்துள்ளது. கல்லுாரி நேரத்துக்கு பின், மாலை 04:00 மணி முதல், மாலை 06:00 மணி வரை, பாடம் சார்ந்த வல்லுநர்களை வைத்து, கணிதம் மற்றும் ஆங்கில பாட சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இதன் வழியே கணிதம், ஆங்கிலப் பாடத்தில் மாணவர்கள் திறன் மேம்படும், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us