sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் ஜன., 7ல் ஒருங்கிணைக்கப்படும்: சோம்நாத்

/

ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் ஜன., 7ல் ஒருங்கிணைக்கப்படும்: சோம்நாத்

ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் ஜன., 7ல் ஒருங்கிணைக்கப்படும்: சோம்நாத்

ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் ஜன., 7ல் ஒருங்கிணைக்கப்படும்: சோம்நாத்


UPDATED : ஜன 02, 2025 12:00 AM

ADDED : ஜன 02, 2025 12:27 PM

Google News

UPDATED : ஜன 02, 2025 12:00 AM ADDED : ஜன 02, 2025 12:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் சரியான புவிவட்ட பாதையில், ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது; அவை, வரும் 7ம் தேதி ஒருங்கிணைக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், சோம்நாத் அளித்த பேட்டி:

பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் சரியான புவிவட்ட பாதையில், 'ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி' செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, 99வது ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. ஜனவரியில், 100வது ராக்கெட்டை ஏவும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இரு செயற்கைக்கோள்களும், 20 கி.மீ., இடைவெளியில் சுற்றி வரும். பின், 1.5 மீட்டர் இடைவெளிக்கு கொண்டு வரப்படும்.

வரும், 7ல், ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும், இரு செயற்கைக்கோள்களும் ஒருங்கிணைக்கப்படும். புதிய சிந்தனையுடன், குறைந்த செலவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில், பெரிய அளவிலான செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இதற்கு தற்போது ஏழு நாட்களாகும் நிலையில், வரும் காலங்களில் விரைந்து செயல்படுத்தப்படும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் போது, 12 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படும்.

செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை மூன்று நாடுகள் வைத்துள்ளன. அதை தற்போது, இந்தியாவும் செயல்படுத்தியுள்ளது. இதை முன்பே செயல்படுத்த திட்டமிடப்பட்டது; அப்போது அவசியம் ஏற்படவில்லை. தற்போது, தேவை ஏற்பட்டுள்ளதால் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இரு செயற்கைக்கோளுடன், 24 ஆய்வு கருவிகளும் குறைந்த செலவில் அனுப்பப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் வரும் நாட்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us