தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


UPDATED : மார் 16, 2026 04:12 PM

ADDED : மார் 16, 2026 04:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2026 04:12 PM ADDED : மார் 16, 2026 04:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் துறைமுகம் சங்கரா வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு கடலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு உரையாற்றினார்.

பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, பள்ளி அளவில் நடத்தப்பட்ட திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பள்ளிக் கட்டணம் முழுவிலக்கு அளிக்கும் கடிதத்தை பெற்றோரிடம் வழங்கினார்.

விழாவில் பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், பள்ளி தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், முதன்மை நிர்வாக அலுவலர் லட்சுமி சிவக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் உதயகுமார்சாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், பள்ளிக்கு, 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஒருங்கிணைப்பாளர் மலர்விழி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் லதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us