தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.எல்.வி., 3ம் நிலை இன்ஜின் சோதனை வெற்றி

பி.எஸ்.எல்.வி., 3ம் நிலை இன்ஜின் சோதனை வெற்றி

பி.எஸ்.எல்.வி., 3ம் நிலை இன்ஜின் சோதனை வெற்றி


UPDATED : நவ 13, 2026 11:09 AM

ADDED : நவ 13, 2026 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 11:09 AM ADDED : நவ 13, 2026 11:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு:
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, இஸ்ரோவின் நம்பிக்கைக்குரிய பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின், மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை இன்ஜின் சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

​இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், சந்திரயான் - 1, மங்கள்யான் மற்றும் ஆதித்யா - எல்1 உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

​இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு மே 18ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., - சி61 (இ.ஓ.எஸ்., - 09 செயற்கைக்கோள்) மற்றும் 2026ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., - சி62 (இ.ஓ.எஸ்., - என்1 செயற்கைக்கோள்) ஆகிய இரண்டு திட்டங்களும் ராக்கெட்டின் மூன்றாம் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தோல்வியடைந்தன.

​தொடர்ச்சியான இந்தப் பின்னடைவுகளைத் தொடர்ந்து, தேசிய அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பரிந்துரைப்படி, மூன்றாம் நிலை திட எரிபொருள் மோட்டாரின் வடிவமைப்பு, முனைப் பகுதி, இயந்திர இணைப்புகள் மற்றும் சீலிங் அமைப்புகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முக்கிய மாற்றங்களைச் செய்தனர். மேலும், மூலப்பொருட்கள் தேர்வு மற்றும் தரப் பரிசோதனை நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.

​இதையடுத்து, மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை இன்ஜினின் தரைவழி நிலை சோதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின், அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us