UPDATED : ஜன 06, 2026 06:51 PM
ADDED : ஜன 06, 2026 06:52 PM
திண்டுக்கல்:
திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
இதன் பின் அமைச்சர் கூறியதாவது:
மாவட்டத்தில் நடப்பாண்டில் 3500 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இன்று மட்டும் 2327 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும். 2026ல் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றும் என்றார்.

