UPDATED : ஜன 08, 2026 10:41 AM
ADDED : ஜன 08, 2026 10:43 AM
உடுமலை:
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வரும் 9ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மையத்தில் (அறை எண்: 439ல்) நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், இம்முகாமில் பங்கேற்று, தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில், 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் கலந்து கொள்ள, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

