sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்

வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்

வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்


UPDATED : மே 08, 2026 08:35 AM

ADDED : மே 08, 2026 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:35 AM ADDED : மே 08, 2026 08:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், இன்று காலை 9:30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:30 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில் வெளியிடப்பட உள்ளது.

அதேநேரம், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தி யாக முடிவுகள் அனுப்பப் படும். மாணவர்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

அதேபோல், வாட்ஸாப்பில், 78452 52525 என்ற எண்ணிற்கு 'Hi' என செய்தி அனுப்பி, துறையின் பெயர் என வந்ததும், 'Directorate of Government Examinations' பிளஸ் 2 என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின், மாணவரின் தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால், ரிசல்ட் வெளியாகும்.

மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, ஆலோசனை மையங்களில், '14417, 104, 14416' என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us