sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM

ADDED : ஜூலை 09, 2025 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM ADDED : ஜூலை 09, 2025 01:45 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் நெறி உள்ளிட்ட பாடங்களை நடத்த, 2012ல் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தற்போது, 12,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது, பணி நிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அப்போது, தி.மு.க., ஆதரவளித்ததுடன், தேர்தல் அறிக்கையில், பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், சென்னை சிவானந்தா சாலையில், 4,000க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், சமூக நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.

பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறுகையில், எங்கள் கோரிக்கையை, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கரை ஆண்டாகியும் நிறைவேற்றாததால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us