தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாமதமாக விண்ணப்பம் இன்று கலந்தாய்வு

தாமதமாக விண்ணப்பம் இன்று கலந்தாய்வு

தாமதமாக விண்ணப்பம் இன்று கலந்தாய்வு


UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM

ADDED : ஜூன் 16, 2025 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM ADDED : ஜூன் 16, 2025 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:
ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட் அரசு கல்லுாரியில், 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, சிறப்பு ஒதுக்கீட்டுடன், கடந்த, 2ல் தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், முதல் மூன்று நாட்கள் கலந்தாய்வு நடந்தது.

இதில், மொத்தம், 20 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று முன்தினம் மாலை வரை நடந்தது. இதுகுறித்து தகவலை, விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல், வாட்ஸாப், மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தாமதமாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் என கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us