தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மைதானங்கள் இல்லா அரசு பள்ளிகள்: விளையாட தவிக்கும் மாணவர்கள்

மைதானங்கள் இல்லா அரசு பள்ளிகள்: விளையாட தவிக்கும் மாணவர்கள்

மைதானங்கள் இல்லா அரசு பள்ளிகள்: விளையாட தவிக்கும் மாணவர்கள்


UPDATED : ஜன 11, 2024 12:00 AM

ADDED : ஜன 11, 2024 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2024 12:00 AM ADDED : ஜன 11, 2024 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் விளையாடுவதற்கு அரசு பள்ளிகளில் போதிய மைதான வசதி இல்லாததால் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் பின் தங்கும் நிலையில் உள்ளது. அவர்களது ஆர்வத்தை ஊக்குவிக்க மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் 624 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மைதான வசதி கூட அரசு பள்ளிகளில் துளியும் இல்லை. பல அரசு பள்ளிகள் சுற்றுச்சுவர் வசதியின்றி தான் உள்ளன. ஊரகப்பகுதிகளில் காலியிடங்கள் அதிகம் இருந்தாலும் பள்ளியை யொட்டி சிறிய அளவிலான பகுதியே இருக்கும்.அங்கும் தடகள பயிற்சிக்கான எந்த வித உபகரணங்களும் இல்லை. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் இது பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்குகின்றனர். ஆனால் இடம் தான் போதாத சூழலில் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதும் 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் ஏற்கனவே அருப்புக்கோட்டை என்.மேட்டுப்பள்ளி அரசு பள்ளியை ஒட்டி மினி ஸ்டேடியமும், சிவகாசியில் மினி ஸ்டேடியமும் செயல்பட்டு வருவதால் அதை தவிர்த்து உள்ள திருச்சுழி, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ஆகிய 4 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க மாவட்ட விளையாட்டு துறை முயற்சித்து வருகிறது. இடம் தேர்வு பணி தாமதமாகி வருகிறது.மைதானங்கள் இல்லாத அரசு பள்ளிகள் எவையென கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விளையாட்டுத்துறையும், மாணவர்களின் திறனை கண்டறிந்து அடுத்தகட்ட போட்டிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய பள்ளிக்கல்வித்துறையும் ஒருங்கிணைந்து செயல்படாதது இதற்கு காரணம். ஆகவே இரு துறைகளும் ஒருங்கிணைந்து மைதானங்கள் தேவைப்படும் பள்ளிகளில் அதற்கான வசதியையும், அறிவிக்கப்பட்ட மினி ஸ்டேடியம் திட்டத்தை விரைவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us