தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் அ.தி.மு.க., பேனர் ஊராட்சி தலைவர் மீது பி.டி.ஓ., புகார்

அரசு பள்ளியில் அ.தி.மு.க., பேனர் ஊராட்சி தலைவர் மீது பி.டி.ஓ., புகார்

அரசு பள்ளியில் அ.தி.மு.க., பேனர் ஊராட்சி தலைவர் மீது பி.டி.ஓ., புகார்


UPDATED : டிச 26, 2023 12:00 AM

ADDED : டிச 26, 2023 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2023 12:00 AM ADDED : டிச 26, 2023 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை:
அரசு தொடக்க பள்ளி கட்டடத்தில், அ.தி.மு.க., கட்சி பேனரை வைத்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி ஊராட்சியில் புதிதாக அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் மீது, அ.தி.மு.க., கட்சி அலுவலகம் என்ற பேனரை, சின்ன நாகபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வைத்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அரசு பள்ளியில், அ.தி.மு.க., அலுவலகம் என பேனர் வைத்துள்ளது தொடர்பாக, வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us