ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மாநாடு
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மாநாடு
UPDATED : டிச 16, 2025 09:08 AM
ADDED : டிச 16, 2025 09:10 AM
துடியலுார்:
வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில்,' நிலையான வளர்ச்சிக்கான பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில், முதல் சர்வதேச மாநாடு நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
தைவான் நாட்டின், தேசிய சுங் செங் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் பாவ்-ஆன் ஹ்சியுங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், நிலைத்தன்மையில் உலகளாவிய போக்குகள், செயற்கை நுண்ணறிவின் உருமாறும் பங்கு மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில், சர்வதேச ஒத்துழைப்புகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
விழாவின் ஒருபகுதியாக, மாநாட்டின் விழா மலர் வெளியீடு மற்றும் தேசிய சுங் செங் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1200 தொழில்நுட்ப கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன், பாலக்காடு ஐ.ஐ.டி., இணை பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

