sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இண்டிகோ விமானம் ரத்து: மகனின் தேர்வுக்காக 800 கி.மீ., கார் ஓட்டிய தந்தை

/

இண்டிகோ விமானம் ரத்து: மகனின் தேர்வுக்காக 800 கி.மீ., கார் ஓட்டிய தந்தை

இண்டிகோ விமானம் ரத்து: மகனின் தேர்வுக்காக 800 கி.மீ., கார் ஓட்டிய தந்தை

இண்டிகோ விமானம் ரத்து: மகனின் தேர்வுக்காக 800 கி.மீ., கார் ஓட்டிய தந்தை


UPDATED : டிச 13, 2025 08:24 PM

ADDED : டிச 13, 2025 08:25 PM

Google News

UPDATED : டிச 13, 2025 08:24 PM ADDED : டிச 13, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகிராம்:
இண்டிகோ விமான சேவை பாதிப்பால், மகன் தனது முக்கிய தேர்வை தவறவிடக்கூடாது என்பதற்காக, ஹரியானாவைச் சேர்ந்த தந்தை ஒருவர், 800 கிலோமீட்டர் கார் ஓட்டி, பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜ்நாத் பங்கல். தன் மகனை டில்லியில், டிசம்பர் 8ம் தேதி நடந்த தேர்வுக்கு அழைத்துச் செல்ல, 6ம் தேதி மாலை, இந்தூர் - டில்லி இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார். கடந்த வாரம் முழுவதும் இண்டிகோ விமானத்தில் சேவை குறைபாடு ஏற்பட்ட நிலையில், முதலில் அவரது விமானம் தாமதம் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. மாற்று விமான பயணமும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ரயிலில் செல்ல முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் மிகுந்த பதட்டம் அடைந்த அந்த தந்தை, மகன் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டுமென நினைத்து, தானே கார் ஓட்டிச் செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து, ஹரியானாவில் இருந்து டில்லி வரை, சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்தை, 19 மணி நேரம் இடைவிடாமல் ஓட்டி சென்றார். பல பிரச்னைகளைக் கடந்து தேர்வு நேரத்துக்கு சில மணி நேரம் முன்பாகவே பாதுகாப்பாக சென்றடைந்தார். மகனும் தேர்வை வெற்றிகரமாக எழுதினார்.

இதுகுறித்து தந்தை கூறுகையில், 'விமானம் ரத்தான போது மகனின் எதிர்காலம் தான் எனக்கு மிகப்பெரியதாக தெரிந்தது. அது கையில் இருந்து நழுவி செல்லக்கூடாது என்பதற்காக இந்த பயணத்தை முடிவு செய்தேன்' என்றார்.

அவரது இந்த அர்ப்பணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us