UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 11:31 AM
ஒட்டன்சத்திரம் :
2023- 2024ம் ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்வில் 500 மாணவிகள், 500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு 11ம் வகுப்பு முதல் இளங்கலை பட்டப் படிப்பு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2023, 24 ஆகிய ஆண்டுகளில் தேர்வு அடிப்பபடையில் தகுதியான மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. 2023 ல் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது கல்லுாரியில் சேரும் நிலையில் உள்ளனர். இதனிடையே இந்தாண்டு ஜனவரியில் அதே தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே அறிவிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

