துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு 15ல் துவக்கம்
துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு 15ல் துவக்கம்
UPDATED : டிச 13, 2025 08:32 PM
ADDED : டிச 13, 2025 08:33 PM
திருப்பூர்:
மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவருக்கு, கடந்த, 10ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்கியது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாடங்களின் தேர்வு நடப்பு வாரம் நடக்கவுள்ளது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான தேர்வு களை வரும், 15ல் துவங்கி, 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு, 15ம் தேதி தமிழ், 16ல் ஆங்கிலம், 17ல் பிறமொழிப் பாடம், 18ல் கணக்கு, 19ல் உடற்கல்வி தேர்வு, 22ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளிகளுக்கு வரும் 15ல் தமிழ், 17ல் பிறமொழிப்பாடம், 18ல் ஆங்கிலம்/கணக்கு, 22ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

