sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : அக் 12, 2024 12:00 AM

ADDED : அக் 12, 2024 11:01 AM

Google News

UPDATED : அக் 12, 2024 12:00 AM ADDED : அக் 12, 2024 11:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரையில் கடந்த செப்.30ல் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 4 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அக்.2ல் சின்னசொக்கிக்குளம், காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரிங் ரோட்டில் உள்ள ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இருநாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் பேச்சிகுளம் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

4வது முறையாக அக்.8ல் கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று 5வது முறையாக புதுார் அல்அமின் நகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளி, வீரபாஞ்சானில் உள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீசார் கூறியதாவது:


தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மற்றவருடைய இமெயிலை 'ேஹக்' செய்து மிரட்டல் விடுக்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. செப்.30ல் வந்த மிரட்டல் குறித்து விசாரித்தபோது இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யாவில் இருந்து இமெயில் அனுப்பப்பட்டது தெரிந்தது.

2வது முறையாக வந்த மிரட்டல் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us