தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 15, 2024 12:00 AM

ADDED : மே 15, 2024 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2024 12:00 AM ADDED : மே 15, 2024 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும், கல்வி ஊக்கத் தொகையை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, ஒவ்வொரு ஆண்டும் திறமையான ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக, கற்கை நன்றே கல்வி ஊக்கத் தொகை திட்டத்தை, செயல்படுத்தி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் குறைந்தது, 80 சதவீதம் மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத மாணவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் கலை அறிவியல் மற்றும் பிற துறைகளில், கல்லூரி முதலாண்டு படிக்கும் மாணவர்களும், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை, மே இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் குறித்த தகவல்களுக்கு, மாணவர்கள், infoanandachaitanya.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவலை அனுப்பி, தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, 90035 12634, 99943 87233 ஆகிய எண்களை அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us